முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை 2 நிமிடங்கள் மவுனம் அனுசரிக்கப்பட்டது

0
1099

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியின் சோகமான மறைவுக்கு, மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்தது.

திரு. பிரணாப் முகர்ஜியின் நினைவாக, மத்திய அமைச்சரவை, 2 நிமிடங்கள் மவுனம் அனுசரித்தது.

மத்திய அமைச்சரவை கீழ்கண்ட தீர்மானங்களை இன்று நிறைவேற்றியது:

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியின் சோகமான மறைவுக்கு மத்திய அமைச்சரவை, ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.

அவரது மறைவால், நாடு புகழ்பெற்ற தலைவரையும், சிறந்த நாடாளுமன்றவாதியையும் இழந்து விட்டது.

நாட்டின் 13வது குடியரசு தலைவராக இருந்த  திரு.பிரணாப் முகர்ஜி, அரசு நிர்வாகத்தில் ஈடு இணையற்றவர். அவர் வெளியுறவுத்துறை, பாதகாப்புத்துறை, வர்த்தகத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.  

மேற்கு வங்கத்தில் 1935ம் ஆண்டு பிறந்த திரு. பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களில் முதுநிலை பட்டமும், சட்ட பட்டமும் பெற்றார். அவர் கல்லூரி பேராசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியவர். கடந்த 1969ம் ஆண்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட அவர், மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணையமைச்சராகவும், கேபினட் அமைச்சராகவம் பணியாற்றினார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அவர் மக்களவை தலைவராக இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, அவர் நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை அவர் முழுவதுமாக நிறைவு செய்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். கடந்தாண்டு, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நமது தேசிய வாழ்க்கையில் அவர் முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவால், நாடு புகழ்பெற்ற தலைவரையும், சிறந்த நாடாளுமன்றவாதியையும் இழந்து விட்டது.

நாட்டுக்கு திரு.பிரணாப் முகர்ஜி ஆற்றிய சேவைக்கு மத்திய அமைச்சரவை தனது பாராட்டுகளை பதிவு செய்கிறது. மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், மத்திய அரசின் சார்பாகவும், ஒட்டு மொத்த நாட்டின் சார்பாகவும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

-PIB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here