திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மிகவும் சேதமடைந்த நிலையில் கடந்த பல மாதங்களாகவே காணப்படுகிறது. இதனால் அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளுக்கு பாதுகாப்பற்ற சூல்நிலை உருவாகியுள்ளது.
இது பற்றி சில ஊழியர்களிடம் நாம் விசாரிக்க அவர்கள் கூறும் பதில்; பலமுறை நாங்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நாங்கள் முறையிட்டும் சரி செய்ய முன்வரவில்லை என தெரிவித்தனர். இனிமேலும் இந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய தாமதித்தால் இடிந்து விழும் அவலம் ஏற்படும். துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-S.மோகன், திருப்பத்தூர்