தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக இன்று பிற்பகல் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. ரத யாத்திரை தொடா்ந்து மதுரை வழியாக 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. இந்த ரத யாத்திரைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சியினரும் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா்.
மேலும் தமிழகத்திற்குள் ரதயாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் பல்வேறு அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.
இதனால் முன் எச்சரிக்கை காரணமாக பல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.