வளரும் கலைஞர்கள், மாணவர்கள், நாடக ஆர்வலர்களுக்காக மே 10 முதல் 17 வரை ஆன்லைன் முறையில் கருத்தரங்கு : கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி நடத்துகிறது

0
1183

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேசிய அளவிலான பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 10ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு மூத்த நாடக கலைஞர்கள் மூலம் தினசரி ஆன்லைன் முறையில் கருத்தரங்கை நடத்த கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த ஆன்லைன் முறையிலான கருத்தரங்கில் தேசிய நாடகப்பள்ளியின் யூ டியூப் சேனல் மற்றும் முக நூல் பக்கத்தில் சேரலாம். ஒரு மணி நேரத்துக்கான கருத்தரங்கம், நாள்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கும். கேள்வி – பதிலுக்காக கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆன்லைன் கருத்தரங்கில், நாடக வரலாறு மற்றும் குறைபாடுகள் குறித்து விவாதிப்பதோடு, டிஜிட்டல் முறையில் நேரடி பயிற்சியும் வழங்கப்படும்.

இதில், மிகவும் கவனத்துடன் பல்வேறு உரைகளை இணைத்து வழங்குவது, விளக்கக்காட்சி, பாடம் நடத்துவது, நாடகம் மற்றும் பிற கலைத் துறையைச் சேர்ந்த மூத்த கலைஞர்களுடன் கலந்துரையாடுவது, இந்திய நாடகக் கலையின் முன்னோடிகளுடன் விரிவான ஆலோசனைகள் ஆகியவை இடம்பெறும். மிகவும் குறுகிய கால சூழ்நிலையில், லட்சக்கணக்கானோரின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கு வழி ஏற்படுவதுடன், கலந்துரையாடலுக்கும் வழிவகை செய்கிறது. அதோடு, ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான தளமாக அமையும்.

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்க  கீழ்க்காணும் தளத்தில் இணையலாம்:

https://www.youtube.com/c/nationalschoolofdrama

ஆன்லைன் கருத்தரங்கை தேசிய நாடகப் பள்ளியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/nsdnewdelhi/ – ல் நேரலையாக காணலாம்.

– PIB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here