வாணியம்பாடி, ஜோலார்பேட்டை தொகுதிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக விளங்கும் ஒகேனக்கல் குடிநீர்

0
1312

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் சூறாவளியாக மேற்க்கொண்டு வரும் நிலையில் வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இரண்டும் அமைச்சர்களைக் கொண்டு நட்சத்திரத் தொகுதிகளாக விளங்குகின்றன. அதிமுகவில் திருப்பத்தூர் மாவட்டத்தின் அதிமுகவின் அடையாளமாகவும் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் விளங்குபவர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு கே சி வீரமணி அவர்கள். கட்சியின் மேலிடத்தில் தனது தொகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகளை எடுத்துக் கூறி நலத்திட்டங்களை கொண்டு வருவதில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக விளங்கிய திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை ஊத்தங்கரை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றி அதற்கான பணிகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்ததன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கத்தாரி தோப்பலகுண்டா பச்சூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் அவர்கள் பேசியதாவது; தொடர்ந்து இரண்டு முறை என்னை சட்டமன்ற உறுப்பினராக அங்கீகரித்த உங்களுக்கு ஆற்றவேண்டிய தலையாய கடமை ஒன்று எனக்கு உள்ளது யாதெனில் ஒகேனக்கல் குடிநீரை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் அதனையொட்டியுள்ள மல்லகுண்டா மற்றும் கத்தாரி ஊராட்சி உள்ளிட்ட கிராமப்பகுதிகள் வரை கொண்டு வந்து ஊரகப்பகுதி மக்களின் கோடைகால குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வை எட்டுவதாகும் என்றார். ஆனால் கொரோனா எனும் கொடிய அரக்கனால் நாடுமுழுவதும் ஊரடங்கு நிலவியதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனது. ஆகையால் இதுபோன்ற நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டு விட்டது.இது ஒருபுறம் இருக்க,
திமுக சார்பில் சிறப்பு மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் அவர்கள் திரியாலம் மல்லகுண்டா பகுதிகளில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அதிமுகவால் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை நாட்றம்பள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு கொண்டு வருவதில் தோல்வி அடைந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரகப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் குடிநீரை கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைத்திட உடனடியாக வழிவகை செய்யப்படும் என்று உறுதி கூறியதுடன் படித்த இளைஞர்கள் அவர்களது பகுதிகளில் வேலைபார்க்கும் வகையில் மல்லகுண்டா பகுதியில் சிப்காட் உருவாக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்களிடம் இதனை எடுத்துக் கூறி கண்டிப்பாக நிறைவேற்றித் தருவேன் என்றும் கூறினார்.

இப்படி அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் மையப்பொருளாக மாறியிருக்கிறது ஒகேனக்கல் குடிநீர். பொறுத்திருந்து பார்ப்போம்.

-S.Mohan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here