விசாரணை இல்லாமல் தூக்கிலிடுங்கள்

0
1313

மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 18 பேரால் பலாத்காரம் சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆப்ரேட்டர் என 18 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமிக்கு மயக்க ஊசி மற்றும் போதை ஊசி போட்டு இந்த கொடூரத்தை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். சிறுமியால் பேச முடியாததை பயன்படுத்தி இந்த கொடூர செயலில் வயது வித்தியாசமின்றி இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 17 பேருக்கும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு அதுதான் சரியான தண்டனை. மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியானது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here