ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க முடியாது… கைவிரித்த மாசுகட்டுப்பாட்டு வாரியம்!

0
1297

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. 15 நாட்கள் பரமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிக்குப் பிறகு மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கும் ஸ்டெர்லைட் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரெட்டியார்புரம் மக்கள் 58 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை 15 நாட்களுக்கு மூடப்பட்டது. பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ஆலையை திறக்க உரிமத்தை புதுப்பித்து தருமாறு ஸ்டெர்லைட் நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. மீண்டும் ஆலையை இயக்க அனுமதி கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here