ஆண்டிற்கு நான்கு முறை கிராமசபா கூட்டங்கள் நம் நாட்டில் நடக்கின்றன. இதன்படி காந்தி ஜெயந்தி அன்று நாட்றம்பள்ளி தாலுக்கா ஆத்தூர்குப்பம் ஊராட்சியில் கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் குமரேசன் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி ஆத்தூர்குப்பம் பஞ்சாயத்து பொது மக்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆரம்பம் முதலே கூட்டத்திற்கு வந்திருந்த சில 15 இளைஞர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து கொண்டே இருந்தனர். கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் ரகளை செய்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதனால் பொது மக்கள் தங்கள் குறைகளை கிராமசபா கூட்டத்தில் தெரிவிக்க முடியாமல் புலம்பிக்கொண்டு திரும்ப சென்றனர்.
கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சியர் அலுவலர் திருமதி மீனா அவர்கள் தலைமை தாங்கினார். ஆத்தூர்குப்பம் பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் சந்திரமோகன் மற்றும் ஊராட்சி செயலர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி செயலர்தான் வழக்கமாக நோட்டீஸ் அடித்து மக்களுக்கு தெரியப்படுத்துவது வழக்கம் ஆனால் இங்கு எதிர்ப்பாளர்களோ தாங்களே பிரத்தியேகமாக தனியாக நோட்டீஸ் அடித்து வீடு வீடாக கொடுத்துள்ளனர்.
-மோகன், வேலூர்