தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையை அடுத்த படூர் கிராமத்தில் 10-12-2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
திரு.I.விஜயன். பத்திரிகை பதிவு அலுவலகத்தின் முன்னாள் துணை பத்திரிகை பதிவாளர்
இந்த முகாமில் துவக்கி வைத்து பேசிய சென்னை பத்திரிகை பதிவு அலுவலகத்தின் முன்னாள் துணை பத்திரிகை பதிவாளர் திரு.I.விஜயன் அவர்கள், மத்திய மாநில அரசுகள், சுகாதார திட்டத்திற்கு அதிக நிதி உதவி செய்வதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த முகாமில் அரசு கண் மருத்துவமனை முன் வந்து இத்தைகைய மருத்துவ பரிசோதனையை கிராமத்திற்கு நேரடியாக வந்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு.காசி அரங்கநாதன், மாநில தலைவர் – தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
இவ்விழாவில் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் திரு.காசி அரங்கநாதன் இச்சங்கம், மாநில முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் பதிவு செய்து இதுபோன்ற முகாம்களை மாநில முழுவதும் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.
இன்று நடைபெறும் மருத்துவ முகாமில் இலவச கண் சிகிச்சை மட்டுமல்லாமல் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த மருத்துவர்களும் வந்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். இந்த முகாமில் அறுவை சிகிச்சிக்கு கண்டறியப்பட்டுள்ள 35-க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனை செலவிலேயே அழைத்துச் செல்லப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் ஆ.மவுரியன். மாநில பொதுச் செயலாளர் – தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
K.பாலாஜி. மாநில துணை தலைவர், தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
ராம சுப்பிரமணியன், கல்வி டுடே ஆசிரியர் – மாநில துணை தலைவர், தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
V.அருணாசலம், மாநில துணை தலைவர் – தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
V.யுவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் – தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம்
மேலும் இந்த முகாமிற்கு K.பாலாஜி தலைமை ஏற்க, முனைவர் ஆ.மவுரியன் முன்னிலை வகிக்க, மாநில தலைவர்கள் V.அருணாசலம், மாநில துணை தலைவர் ராம சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் V.யுவராஜ், மாநில துணை செயலாளர், தலைமை நிலைய செயலாளர் V.வடிவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் S.ரமேஷ், அ.சிவராமன், அபில்குமார், மணிவண்ணன், கலந்துகொண்டார்கள்.
இந்த முகாமின் வாயிலாக, சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். விழாவில் புகைப்பட பத்திரிகையாளர் மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.