மக்களவைத் தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட 36 இந்தி திரை நட்சத்திரங்கள் ஒப்புக் கொண்டதாக கோப்ராபோஸ்ட் நடத்திய ரகசிய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.பல்வேறு துறைகளில் நடக்கும் குற்றச் செயல்களை, ‘கோப்ரா போஸ்ட்’ என்ற புலனாய்வு ஊடகம் அவ்வப்போது அம்பலப்படுத்தி வருகிறது.
இதற்காக தங்கள் செய்தியாளர்களை மாறு வேடங்களில் அனுப்பி ரகசிய ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்து அதை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக ‘ஆபரேஷன் கரோக்’ என்ற பெயரில் கோப்ராபோஸ்ட் ஒரு ரகசிய ஆய்வு நடத்தியது.
இதுகுறித்து கோப்ராபோஸ்ட் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் செயல்படும் மக்கள் தொடர்பு முகமையின் பிரதிநிதிகளைப் போல கோப்ரா போஸ்ட் செய்தியாளர்கள், நடிகர் கள், இயக்குநர்கள், பாடகர்கள் உட்பட பிரபலமான சில இந்தி திரை நட்சத்திரங்களை அணுகினர்.
அப்போது, வரும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி களுக்கு ஆதரவாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட் டவற்றில் கருத்துகளை பதிவிட் டால் கணிசமான தொகை பெற்றுத் தருவதாக பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதற்கு, அமிஷா படேல், மகிமா சவுத்ரி, விவேக் ஓபராய், ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, சன்னி லியோன் உள்ளிட்ட 36 பேர் ஒப்புக் கொண்டனர்.
ஒரு தகவலுக்கு ரூ.50 லட்சம்அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக ஒரு குறுந்தகவலை பதிவிட இந்தி திரை நட்சத்திரங்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கட்டணமாக கேட்டனர். குறிப்பிட்ட பிரமுகர்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தொகை மாறுபட்டது. சிலர் 8 மாத ஒப்பந்தத்துக்கு ரூ.20 கோடி வரை கேட்டனர். இந்தத் தொகையில் 10 முதல் 20 சதவீதத்தை காசோலை அல்லது வங்கியில் நேரடியாக செலுத்தவும் பெரும்பகுதியை ரொக்கமாகவும் (கறுப்பு பணம்) வழங்குவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதை அவர்கள் மறுக்கவில்லை.அதேநேரம் ரஸா முராட், வித்யா பாலன், அர்ஷத் வர்சி மற்றும் சவும்யா தாண்டன் உள்ளிட்ட சில திரை நட்சத் திரங்கள் பணத்துக்காக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட மறுப்பு தெரிவித்து விட்டனர்.
முக்கிய பிரமுகர்கள் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவது சட்டப்படி குற்றம். எனவே, இதுபோன்ற மறைமுக பிரச்சாரங்களை கண்காணிக்கவும் தடுக்கவும் தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.திரை நட்சத்திரங்கள், விளை யாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களை பல லட்சக்கணக்கானோர் சமூக வலை தளங்களில் பின்தொடர்கின்றனர்.
இதனால் இவர்கள் பதிவிடும் கருத்துகள் அவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, முக்கிய பிரமுகர்களை வணிக நோக்கத்துக்காக (விளம் பரம்) கார்ப்ரேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களும் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.