நாட்றம்பள்ளி தாலுக்கா அண்ணாநகர் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் தலைமை ஆசிரியர் லேட் சென்னப்பன் மனைவி செந்தாமரை என்பவரது மாட்டு கொட்டகை இன்று காலை 11 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது,தகவல் அறிந்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர் , மேலும் தகவல் அறிந்து மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலர் பையாஸ் அகமது மற்றும் உதவியாளர் மோகன் ஆகியோர் தீப்பற்றியது பற்றி திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தீப்பற்றியது எப்படி என சார்பு ஆய்வாளர் திரு. வீரமணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.