திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் கடந்த பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. பொது மக்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பொதுநலன் கருதி மக்கள் விசாரணை பத்திரிகையில் இது பற்றிய செய்தி ஒன்றை நாம் வெளியிட்டோம். இச்செய்தி அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இன்று 20.12.2019 பழுதடைந்து கிடந்த சுற்றுச்சுவரை இடித்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக துரித நடவடிக்கை மேற்க்கொண்ட பொதுப்பணித்துறைக்கு மக்கள் விசாரணை பத்திரிகை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் பொது நலனில் மக்கள் விசாரணை.
-S.மோகன், திருப்பத்தூர்