திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, மல்லகுண்டா ஊராட்சியில் நேற்றிரவு இரண்டு வீடுகளில் கொள்ளை போயுள்ளது. முதலாவதாக தாசிரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், இரண்டு சவரன் நகை மற்றும் 1/2 கிலோ வெள்ளி மற்றும் உண்டியல் பணம் என சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயுள்ளன. வீட்டின் உரிமையாளர் முருகேசன் அவர் புதிதாக வாங்கியுள்ள இடத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அங்கு நேற்றிரவு தனது மனைவியுடன் புதிய வீட்டில் தங்கியுள்ளார். இதனைப் பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அடுத்ததாக இந்த வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவரின் தாய் கூலி வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக 5000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு புதிய வீட்டில் மகன்களுடன் தங்கியுள்ளார். அருகில் உள்ள மஞ்சி வீட்டின் பூட்டை உடைத்து அந்த பணத்தையும் திருடியுள்ளனர். ஒரே இரவில் அருகருகே அமைந்த இரண்டு வீடுகளில் கொள்ளை போனதால் தாசிரியப்பனூர், குருபவாணிகுண்டா உள்ளிட்ட கிராம மக்கள் பீதில் உறைந்து போயுள்ளனர். காவல்துறையினர் இரவில் ரோந்துப் பணிக்கு சரியாக வருவதில்லை எனவும் கூட்டத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர்.
– S.மோகன்