தமிழகத்தில் கடந்ந 2015 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான அரசு கேபில் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அரசு இ சேவை மையங்கள். மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் செயல்படும் 600-க்கும் மேற்பட்ட இ சேவை மையங்களில் மொத்தம் இரண்டாயிரம் ஊழியர்கள் வரை மாநில அரசினால் டெண்டர் விடப்பட்டு தனியார் கம்பெனிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றனர். இப்பனிக்கான நேர்கானல் தேர்வின்போது தங்களுடைய ஊதியம் 8000 என்றும் ஆறு மாதத்திற்கொரு முறை 500 வீதம் சம்பள உயர்வு இருக்கும் என்றும் சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனியின் மூலமும் அரசின் மூலமும் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும் சம்பள உயர்வு கூறியது போல், சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சேவைகள் இச்சேவை மையத்தில் நடக்கின்றன. அன்றாடம் ஏராளமான பொது மக்கள் இந்த இ சேவை மையங்கள் மூலம் தங்களுக்கு தேவையான சாண்றிதழ்களைப் பெற அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்துகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஒரு இ சேவை மையத்தின் மூலம் நாளொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. ஆனால் இதில் பணிபுரியும் ஊழியர்கள் பெறும் ஊதியம் ஒரு நாள் வருமானம்தான். மாதம் முழுவதும் மக்களுக்காக அயராது உழைத்தும் மன நிறைவான ஊதியம் இல்லை. கடந்த மாதம்தான் அதிசயமாக 8000 ரூபாய் ஊதியம் கொடுத்துள்ளனர். இதுபற்றிய வழக்கும் தொழிலாளர் நலத்துறையில் நிலுவையில் உள்ளது. இதேபோல் அண்டை மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இ சேவா ஊழியர்கள் பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். எனினும் தமிழகத்தில்தான் இந்த நிலை. இப்பணியின் மூலம் கிடைக்கும் ஊதியத்தை வைத்து தங்கள் குடும்பத்தில் அன்றாட செலவுகளுக்கு கூட ஈடுகட்ட முடியாத அவல நிலையில் உள்ளனர். எனவே மாநில அரசும் சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனியிகளும் இ சேவை மைய ஊழியர்களின் குடும்ப நலன் கருதி, ஊதிய உயர்வுக்கு வழிவகை செய்ய முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கலக்கமான கோரிக்கையாக உள்ளது.
-S.மோகன்