திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை அடுத்த திகுவாபாளையம் – ஜமான்கொள்ளை செல்லும் தார்சாலை அருகிலேயே அமைந்துள்ள 33KV மின்கம்பம் பழுதடைந்துள்ளதை அறிந்து அதை மாற்றுவதற்கு, மாற்று மின்கம்பத்தை அம்பலூர் மின்வாரிய அலுவலர்களால் கடந்த ஓராண்டிற்கு முன்பு சம்பந்தப்பட்ட மின்கம்பத்திற்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். ஆனால் கம்பத்தை மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தியதால் அந்த மாற்று மின்கம்பம் பூமியில் மெல்ல மெல்ல புதைந்து கொண்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் சாலையின் அருகில் அமைந்துள்ள அபாயகரமான மின்கம்பத்தை மாற்றாமல் இருப்பதால் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இம்மின்கம்பத்தை உடனடியாக மாற்றி பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
S.Mohan
















