1000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த சிவலிங்கம்! தியானத்தின் மூலம் முள் புதர்களிலிருந்து கண்டெடுப்பு: அற்புதங்கள் நிகழ்த்தும் சித்தர் சிவானந்த அம்மையார்!

0
682

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கீழ்கருமனூர் என்னும் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள அருகில் குளம் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மக்கள் இங்கு வழிபட்டு வந்தததும், காலப்போக்கில் அங்குள்ள மக்கள் குடிபெயர்ந்ததால் இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து மண்ணில் புதையுண்டுள்ளது. பிறகு மூன்று தலைமுறையாக யாருக்கும் இந்த கோவில் தெரியாமல் இருந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கீழ்கருமனூர் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உறவினர் வீட்டில் நகைகள் திருடு போனதாக சிவானந்த அம்மையாரிடம் நாடினர். அந்த ஊரைப் பற்றியே அறிந்திடாத அம்மையார் அவர்கள் தன் தியானத்தின் மூலம் நகைகளை திருடியவர்களின் அங்க அடையாளங்களை துள்ளியமாக குறிப்பிட்டு, ஒரு நபரைப் பற்றி அம்மையார் சொன்னதை வைத்து நகைகளை திரும்ப பெற்றனர்.
அவர்களிடன் எந்த ஒரு பணமோ, பொருளோ வாங்காமல் இலவசமாக தன் தியானத்தின் மூலம் செய்துள்ளார் சிவானந்த அம்மையார். இதைப் போன்று இன்னும் பல அற்புதங்களை செய்திருக்கிறார். இதேபோன்று, பழமை வாய்ந்த சிலை திருட்டை ஒரே நாளில் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார் சித்தர் சிவானந்த அம்மையார்.
நகைகள் திருட்டு சம்பந்தமாக அம்மையாரின் தியானத்தின் போதுதான் கீழ்கருமனூர் கிராமத்தில், யாரும் கண்டுகொள்ளாமல் மண்ணில் புதைந்து, ஒரு சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.
இந்த ஊரைச் சுற்றி இருக்கக்கூடிய நான்கு கிராமங்களான மேட்டூர் காலனி, பள்ளக்காலனி ஆச்சாரி கண்டிகை, தலையாரி பாளையம் உள்பட சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு, இந்த சிவன் கோயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என சித்தர் சிவானந்த அம்மையார் கூறினார்.
மேலும் இந்த கோவிலுக்கு மங்களேஸ்வரர் – மங்கலம்பிகை எழுந்தருளியுள்ள முக்கிய சிவன் கோயில் தளமாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில், பல முக்கிய பிரமுகர்களையும், ஆன்மீக பற்றாளர்களையும், சிவ பக்தர்களையும் நேரடியாக சந்தித்து இப்பகுதிக்கு சிவன் கோயில் அவசியம் என்பதும், மறைக்கப்பட்ட தடயங்கள் வெளிக்கொண்டுவர இதுவே தக்க தருணம் என்றும் எடுத்துக் கூறியுள்ளார் திருமதி பேச்சியம்மாள் என்னும் சித்தர் சிவானந்த அம்மையார்.


அம்மையார் அவர்கள், “இந்த இடம் கோபுரத்துடன் கூடிய சிவன் கோவில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் முழுமையாக அம்மையாரின் கணவரின் ஒத்துழைபோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.


மேலும், 05.05.2023, வெள்ளிக்கிழமை, சித்ரா பவுர்ணமி அன்று மங்களாம்பிகை உடன் உறை மங்கள ஈஸ்வரர்-க்கு “பௌர்ணமி பூஜை” மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை 4.30 – 5.00 மணியளவில் கரும்பாத்தம்மன் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா நடைபெற்றது. கொட்டும் மழையிலும் அம்மையாருடன் பக்த்தர்கள் பால் குடம் ஏந்தி வீதி உலா வந்தனர். மாலை 5.30-6.30 மணியளவில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அதனைத் தொடர்ந்து மாலை 7.30 மணியளவில் திருவிளக்கு பூஜையும் பிறகு, அன்னதானம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here