சென்னை: சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள், ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது ஸ்டாலின் அளித்த பேட்டி: கூவத்தூர் பேரம் நடந்ததாக அதிமுக எம்.எல்.ஏ., அளித்த வீடியோ வெளியானது. சினிமா படங்களில் வெளியான காமெடி சீன் போல் சரவணன் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். வீடியோ பேரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் விளக்கம் அளிக்கவேண்டும் . இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு கவிழ்க்கப்பட வேண்டும். கலைக்கப்பட வேண்டும். தமிழக அரசு அராஜக போக்குடன் செயல்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.