தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த ஐம்பது வருடங்களாக கூட்டுறவு அறிஞர் அன்னா நெசவுத்தொழிற்சாலை இயங்கி வருகிறது, தற்போது மூடும் நிலையில் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் தொழில் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள கடைகளுக்கும் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்க்கும் த்க்ஹுனி கடைகளுக்கும் குறைந்த ஊதியத்திற்கு செல்கின்றனர்.
இந்த தொழிற்சாலையை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் துணியானது அனைத்து விதமான ஊர்களான கோஃப்டெக்ஸ்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு நெய்யப்படும் துணி வகைகளான கொசு வலை, மெத்தை விரிப்பு, துண்டு அனைத்தும் தரமானதாகவும் மிக குறைந்த விலையிலும் விற்கப்பட்டும். இதனால் பல குடும்பங்கள் பிழைத்து வந்தன. ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறி வெறிச்சோடி காணப்படுகிறது.
எதோ இன்னும் ஓரிரு மக்கள் அங்கு வேலை பார்த்து வருகின்றனர். அதற்கு அவர்கள் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாதது. நாங்கள் எங்கே போய் பிழைப்பை தேடுறது என்று வருத்தத்துடன் கூறுகின்றனர். அப்படியே வேலை செய்தாலும் தகுந்த கூலி இல்லை. கூலி கொடுத்தே ஆறு மாதங்கள் ஆகின்றது, என்கிறார்கள்.
தொழில் செய்வோர் கூறுகையில், சரியான நிர்வாகம் இல்லை, அதை எடுத்து நடத்த எந்த ஒரு நபரும் முன் வருவதில்லை. பார்ப்பதற்கு குப்பை கூடாரமாக மாறி வருகின்றது. இந்த தொழிற்சாலையானது எத்தனை பேருக்கு சோறு போட்டது, இப்பொழுது அத்தனைபேரும் பட்டினியால் உள்ளனர்.
இதை சரி செய்யும்படியும் எத்தனை முறை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது நவநாகரிக ஆடைகளை விரும்புவதால் காதர் துணிகளின் மேல் அவ்வளவாக நாட்டம் இல்லை. அந்நிய துணிகளினால் வரும் விளைவுகளை யாரும் உணர்வது இல்லை. இதைப்பற்றி கலெக்ட்டரிடம் எத்தனை முறை மனு கொடுத்தும் பயனளிக்கவில்லை.
தமிழக அரசு கவனித்து நலிந்து வரும் நேசவுத்தொழிலை மேலோங்கி நெசவு தொழிலாளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி சிறப்படைய செய்து, அனைத்து மக்களும் கோஃப்டெக்ஸ் துணிகளை வாங்கி உடுத்துமாரும் உத்தரவிட்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமார்?
-சிலம்பரசு தருமபுரி