நான் கடைசி வரை கலைஞனாகவே இருப்பேன்

0
1421

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று புதுச்சேரிக்கு வந்த அவர், சில இடங்களை பார்வையிட்டார். பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என்று அரசியலுக்கு வரட்டும்; ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் அவர்கள் அரசியலுக்கு வந்திருப்பார்கள்.

ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் அரசியல் கொள்கைகளை அறிவித்த பிறகே எனது கருத்தை தெரிவிப்பேன். கமல் தனிக்கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் கடைசி வரை கலைஞனாகவே இருப்பேன் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here