எல்லா புகழும் குருவின் திருவடிக்கே!

பேரன்பு கொண்ட இணைய வாசகர்களுக்கு வணக்கம்.
நாம் ஒவ்வொருவரும் சுவாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். யோசனை, சிந்தனை, எண்ணம், நினைவு, ஏக்கம், கனவு எல்லாம் மனிதனுள் நிகழ்வது வியப்பாக இருக்கிறது. யோசிக்கையில் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

ஆலின் சிறு விதையில் எவ்வளவு பெரிய உயிர் அடங்கியிருக்கிறது. வானின் உயரத்தில் பறக்கும் வல்லூறு சிறு முட்டையிலிருந்துதான் உருவாகிறது. யோசிக்கின்ற மனிதனுக்கு எல்லாமே சிந்தனையை மலரசெய்ய தூண்டுகோலாகிவிடுகின்றன. அவர்களுக்குத்தான் தேடல் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சமூக நல்லொழுக்கவதிகளுக்காகவே “மக்கள் விசாரணை” இணைய இதழ் துவங்கப்பட்டது.உயர்வானது, அற்பமானது, நல்லது, கெட்டது என்ற பேதங்களின்றி நம்மோடு வாழ்கிற நம்கண்ணில் படுகின்ற புல்லும், புழுவும், விண்ணில் சூரியனும் அதை சுற்றும் பிற கோள்களும் மானுட விந்தைக்கு கருவாகிறது என்று சொல்லலாம்.

இதற்க்காகத்தான் பெரும்பாலும் நடந்து, முடிந்த, மறைக்கப்பட்ட, மறைக்கபோகின்ற சம்பவங்களால் வெகுஜென மக்களுக்கு தீங்கு விளையாமல் இருக்கவே உண்மைகளை அப்படியே தோலுரிக்க இப்பணியை ஆரம்பித்துள்ளோம்.

நாட்டில் உள்ள நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆணவம், மீட்சி, காதல், கற்பு, ராஜதந்திரம், குறுக்குவழி, கடமை, நேர்மை, கலப்படம், லஞ்சம், ஊழல் என தொடங்கி அரசியல் சினிமா வரை இந்த இணையம் அலசபோகிறது. எனவே நமது இதழின் வாசகர்கள் தொடர்ந்து இணையத்திலும் வாசித்து மானுடம் பயன்பெற தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

பாமரனை பண்புடையோனாகவும் பண்புடையோனைத் தெய்வமாகவும் உயர்த்தும் நோக்கமே நாம் வாழ்வின் பொருளாக இருக்கவேண்டும். உண்மையானவர்களும் அன்புடையவர்களும் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. வாழ்வதற்கு பொருள் வேண்டும்! வாழ்வதிலும் பொருள் வேண்டும்!!.

என்றும் பேரன்புடன்.
முனைவர் ஆ.மவுரியன்
(முதன்மை ஆசிரியர் மக்கள் விசாரணை)


முதன்மை ஆசிரியர்
முனைவர் ஆ.மவுரியன், B.A., M.A., Ph.D.(Hons)
நிர்வாக ஆசிரியர் – வீ.சிவசங்கர்
இதழ் ஆலோசகர் – P.ஆறுமுகம்

ஆசிரியர் குழு

V.அருணாச்சலம்

S.சுப்ரமணியன்

A.முருகையன்

மாவட்ட முதன்மை செய்தியாளர்கள்

N.குப்புசாமி
S.V.பலகிருஷ்ணன் – தென்சென்னை
P.தாமோதரன் – சேலம்
சத்யராஜ் – நாமக்கல்
சரவணன் – தென் சென்னை
P.ராமலிங்கம்
வீர ஆறுமுகம் – சிவகங்கை
ரவி – மதிய சென்னை
ரமேஷ் குமார்
வடசென்னை
R.R.சண்முக வேல்
வடசென்னை
பாலகிருஷ்ணன்
கோவை
M.தரணி – சென்னை
ரமணாத்திரி திருவண்ணாமலை
M.சரவணன் – திருவண்ணாமலை
டீனா – சென்னை
P.மாரிமுத்து – சென்னை
சசிகலா – சென்னை
சிலம்பரசன் – தர்மபுரி
M.சாந்தி – ஈரோடு
செந்தில்குமார் – கோவை
மணிகண்ட குமாரசாமி – மதுரை
N.சேதுராமன் – சென்னை
A.D.ராஜேந்திரன் – சென்னை
S.மோகன் – வேலூர்
முருகம்மாள்
B.நாராயணசாமி

S.அனந்த கிருஷ்ணன்