All India Small Newspapers Association (Notified Under Gazette Of India) ஆனது புது டில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்திரிகை துறைக்கான தேசிய அமைப்பாகும். நாற்பது வருட காலமாக, இந்தியா முழுவதும் கிளைகள் அமைத்து , பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் அதன் நிர்வாகிகளையும் கொண்டு பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்பாகும். இதன் தேசிய தலைவராக மதிப்பிற்குரிய திரு. சிவசங்கர் திருபாதி அவர்களும், தேசிய பொதுச் செயலாளராக திருமதி. ஆர்த்தி திருபாதி (Member – Press Council of India) அவர்களும் தென்னிந்திய தலைவராக திரு. ஸ்ரீராம் அவர்களும் அமைப்பை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.




இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான AISNA வின் தமிழக மாநில பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழாவானது 18/06/2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் டால்பின் பார்க்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக மாநிலத் தலைவராக திரு. சிவயோகி மவுரியன் (ஆசிரியர் – மக்கள் விசாரணை), பொதுச்செயலாளராக திரு.வ.அருணாச்சலம் (நிர்வாக ஆசிரியர் – அருணை முரசு), துணை பொதுச்செயலாளராக திரு.கே.ஜெகதீசன் (ஆசிரியர் – கல்வி பார்வை), திரு.சி.சரவணன் (ஆசிரியர் – நீதி தேவதை), திரு.பி.ராஜேஷ் (முதன்மை செய்தியாளர் – மக்கள் விசாரணை), மாநில பொருளாளராக திரு.கே ரமேஷ் குமார் (துணை ஆசிரியர் – அருணை முரசு) மாநில துணைத்தலைவர்கள் திரு ராமச்சந்திரன் (ஆசிரியர் – சிங்க பாதை), திரு.தாமோதரன் (துணை ஆசிரியர் – மக்கள் விசாரணை), திரு.பி.சி.தங்கராஜ் (செய்தியாளர் – மக்கள் விசாரணை), மாநில செயலாளர்களாக திரு.S.சரவணன் (ஆசிரியர் – சி.வி.பி நியூஸ்), திரு.வி.யுவராஜ் (ஆசிரியர் – கடல் துளிகள்), மாநில இணைச் செயலாளர்களாக திரு.எஸ்.விஜய் (ஆசிரியர் – பாரத இதழ்), திரு.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் (துணை ஆசிரியர் – மக்கள் விசாரணை), திரு.பிரபாகரன் (ஆசிரியர் – புரசை எக்ஸ்பிரஸ்), திருமதி.எப்சிபா தாமஸ் (இணை ஆசிரியர் – விடியும் நேரம் தினசரிநாளிதழ்), திரு.ஏ.என். சேதுராமன் (செய்தியாளர் – மக்கள் விசாரணை), திரு.என். மணிவண்ணன் (செய்தியாளர் – புதிய நாளிதழ் தினசரி), திரு.எஸ்.ராமலிங்கம் (ஆசிரியர் – தின தரணி நாளிதழ்), திரு.என்.வி.சிவசங்கர் (செய்தியாளர் – வாய்மை குரல்), மாநில ஒருங்கிணைப்பாளராக திரு. கே.ஹசரத்தயா (செய்தியாளர் – மக்கள் விசாரணை), மாநில இணை ஒருங்கிணைப்பாளராக திரு.எம்.தட்சிணாமூர்த்தி (ஆசிரியர் அரசியல் சேவகன்), திரு.எஸ்.முனுசாமி (ஆசிரியர் – சட்டக் குரல்), திரு.ஆர்.டி.ஐ. செல்வம் (ஆசிரியர் – முதல் தகவல்), மாநில இணை சேர்மனாக திரு.ராஜி (ஆசிரியர் – வேட்டை), மாநில இயக்குனராக திரு.சாய்குமார் (செய்தியாளர் – அருணை முரசு) ஆகிய மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்ட பத்திரிகையாளர்கள், பொறுப்பாளர்களாக பதவி ஏற்று கொண்டார்கள். அனைவருக்கும் AISNAவின் தென்னிந்திய தலைவர் திரு.M.ஸ்ரீராம் ஜி அவர்கள் அடையாள அட்டைகளை வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.




மாநில பொதுச் செயலாளர் திரு.வ.அருணாச்சலம் மற்றும் மாநில பொருளாளர் திரு.கே.ரமேஷ் குமார் நன்றி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.