

மக்கள் விசாரணை செய்தியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது மக்கள் விசாரணை மாதஇதழ் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தினுடைய ஏழாவது மாநில மாநாடு சிறப்பாக 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று விருகம்பாக்கம், டால்பின் பார்க்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக All India Small Newspaper Association-ன் தென்னிந்திய தலையவர் ஸ்ரீராம்ஜி அவர்கள், ராம்கி ஐஏஎஸ் அகாடமி நிறுவனத் தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் விசாரணைனுடைய முதன்மை ஆசிரியர் வ.அருணாச்சலம் அவர்கள் தலைமை தாங்க மக்கள் விசாரணை ஆசிரியர் சிவயோகி மவுரியன் முன்னிலையில் மற்றும் மக்கள் விசாரணை பத்திரிகை இணை ஆசிரியர், துணை ஆசிரியர், உதவி ஆசிரியர், முதன்மை செய்தியாளர்கள் முன்னேற்பாடின்படி விழா இனிதே தொடங்கியது.


விழாவில் நமது மக்கள் விசாரணை நாமக்கல் மாவட்ட செய்தியாளர் திரு.தியாகராஜன் அவர்கள் இறைவணக்கத்தை பாட விழா இனிமையாக தொடங்கியது. விழாவில் தமிழ் பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் 10வது பொது குழு தொடங்கியது. பொதுக்குழுவில் கி.ராமசுப்பிரமணியன் முன்னாள் தலைவர் அவர்கள் நீக்கப்பட்டு பொதுச் செயலாளராக இருந்த சிவயோகி மவுரியன் அவர்கள் மாநில தலைவராக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.


பிறகு திரு.ராம்கி என்று செல்லமாக அழைக்கப்படும் ராமகிருஷ்ணன்அவர்கள் மக்கள் விசாரணை செய்தியாளர்களுக்கு சிறந்த புகைப்பட கலைஞர், சிறந்த செய்தியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மக்கள் விசாரணை 13 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். விழாவில் பத்திரிகையாளர்களுக்கு 2022 மற்றும் 23ம் ஆண்டுக்கான அடையாள அட்டை, நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன பிரஸ் பாஸ் வழங்கப்பட்டது.
விழாவில் ஆசிரியர் சிவயோகி மவுரியன் அவர்கள் கூறும் பொழுது, தகுதி வாய்ந்த மக்கள் விசாரணை செய்தியாளர்களுக்கு அரசு அடையாள அட்டை மட்டும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பது மற்றும் அனைத்து அரசு சலுகைகளும் பெற்று தருவது, மாவட்டம் தோறும் பத்திரிகைகளை சென்று விரிவுபடுத்துவது, மாவட்ட சார்பாக இருக்கக்கூடிய செய்தித்துறை மூலமாக அரசு சலுகைகளை பெற்று தருவது என பல்வேறு கோரிக்கைகளை உறுதிமொழியாக எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மக்கள் விசாரணை செய்தியாளர்கள் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் தேநீர், சமோசா வழங்கப்பட்டது.


கூட்டத்தில் சிறப்புரை வழங்கிய ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மக்கள் விசாரணை செய்தியாளர்கள் கேட்ட ஜனநாயகத்திற்கும் அரசு இயந்திரத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இணைப்பு எளிதாக இல்லை, அதற்கு ஆட்சியாளர்கள் நடைமுறை சிக்கல்கள் எப்படி கையாளப்பட வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார். பின்பு திரு.ராம்ஜி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.


All India Small Newspaper Association-ன் மாநிலத் தலைவர் கல்வி டுடே ஆசிரியர் திரு.கே.ராமசுப்பிரமணியன், கவிஞர் ஆ.தே.முருகையன் இணை ஆசிரியர் மற்றும் அனைத்து முதன்மை ஆசிரியர்களும் சிறப்புரை வழங்கி கௌரவித்தார்கள். அனைவருக்கும் சந்தன மாலை மற்றும் பொன்னாடைகளை வழங்கி மக்கள் விசாரணை ஆசிரியர் முதன்மை ஆசிரியர் அருணாச்சலம், துணை ஆசிரியர் ரமேஷ்குமார் மற்றும் அனைவரும் கௌரவித்தார்கள். விழாவில் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. விழாவில் நன்றியுரை மக்கள் விசாரணை துணை ஆசிரியர் ரமேஷ்குமார் வழங்கினார்.