#ME TOO-வில் வெளிப்படையாக பதிவிடும் பாலியல் தொல்லைகளை சந்தித்து வரும் பெண்கள்

0
902

பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை உலகமெங்கும் பல பெண்கள் வெளிப்படையாக கூறிவருகிறார்கள். சினிமா துறையின் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை ஹேஷ்டேக் மீ டூ என்ற இயக்கத்தில் பெண் பிரபலங்கள் தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டில் பெண் பிரபலங்கள் தொடங்கிய இந்த ஹேஷ்டேக் மீடூ இயக்கத்தில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை பதிவிட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, போன வாரம் பாலிவுட்டில் தனிஸ்ரீ, நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து (#ME TOO)மீடூ வில் பாடகி சின்மயியும் கவிஞர் வைரமுத்துவால் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியிட்டார். இந்த மீடூ இயக்கம் தற்பொழுது உலகம் முழுவதும் பயங்கர டிரெண்டாகி வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பெண்கள் வரை தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி, பெண்கள் மீடூவில் பாலியல் குற்றச்சாட்டை பதிவிடுவதில் தவறில்லை, ஆனால் அதற்கு போதிய ஆதாரம் வேண்டும். இதை வைத்து பலர் கதை விடுகிறார்கள் என மெலனியா டிரம்ப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here