சென்னை: தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும்; அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பின் பொதுச் செயலாளர் தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பை தொடங்கியதே அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்கத்தான் என்று தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தனது மனைவிதான் முதல்வர் என்றெல்லாம் தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.